Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 22 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகத் தடகள சம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்துடன் ஜமைக்காவின் ஷெலி-அன் பிறேஸர் பிறைஸ் ஓய்வு பெற்றார்.
ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பெண்களுக்கான 4x100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் ஜொனியெல்லெ ஸ்மித், தியா மற்றும் தினா கிளெய்டன் இரட்டையர்களுடன் இணைந்து 38 வயதான பிறேஸர் பிறைஸ் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ஐக்கிய அமெரிக்காவின் ஷகாரி றிச்சர்ட்ஸன், மெல்லிஸா ஜெஃபெர்சன்- வூடன், தவனிஷா டெரி, கைலா வைட் ஆகியோர் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தனர்.
உலக சம்பியன்ஷிப்பில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 17ஆவது வயதில் ஜப்பானிலே அறிமுகத்தை மேற்கொண்ட 38 வயதான பிறேஸர் பிறைஸ் இத்துடன் தனது 25ஆவது பதக்கத்தை பெற்றுக் கொண்டார். கடந்த 15 போட்டிகளில் 2017ஆம் ஆண்டு சம்பியன்ஷிப் 100 மீற்றருக்கு மறுநாள் மகனைப் பிரசவித்த நிலையில் அப்போட்டியில் மாத்திரமே கலந்து கொண்டிருக்கவில்லை.
31 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
11 Jan 2026