Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 20 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகப் புகழ்பெற்ற காரோட்டியான மைக்கல் ஷூமாக்கர், தனது உபாதைக்குப் பின்னர் மீண்டும் நடக்க ஆரம்பிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், அவர் நடக்கிறார் எனத் தெரிவித்தமைக்காக, சஞ்சிகையொன்றின் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பனிச்சறுக்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விபத்தைச் சந்தித் ஷூமாக்கர், இறக்கும் நிலைக்குச் சென்று, பின்னர் உயிர் தப்பியிருந்தார். ஆனால் அவர், மீண்டும் நடக்கத் தொடங்கியிருக்கவில்லை.
கடந்தாண்டு டிசெம்பரில் செய்தியொன்றை வெளியிட்ட ஜேர்மனியச் சஞ்சிகையொன்று, உடற்கூற்று நிபுணர்களின் உதவியுடன் அவர் சில காலடிகளை எடுத்து வைத்ததாகவும் ஒரு கையை உயர்த்தக்கூடியவாறு மாறியுள்ளாரெனவும் தெரிவித்திருந்தது.
இதுவரை காலமும், அவரது உடல்நிலை தொடர்பாக மௌனம் காத்துவந்த அவரது குடும்பத்தினர், தவறான செய்தியை வெளியிட்டமைக்காக, அச்சஞ்சிகை மீது வழக்குத் தாக்கல் செய்வதாகத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், அவர் இன்னமும் நடக்கத் தொடங்கவில்லை என்ற தகவலையும் அவர்கள் நீதிமன்றத்துக்கு வழங்கியுள்ளனர்.
33 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago