2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஷாருஜனின் சதத்தோடு ஆப்கானை வென்ற இலங்கை

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாஜாவில் நடைபெற்று வரும் ஆசிய கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கெதிரான குழு பி போட்டியொன்றில் ஷாருஜன் சண்முகநாதனின் சதத்தோடு இலங்கை வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஷாருஜனின் 102, புலிந்து பெரேராவின் 53 ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 244 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், நியூட்டன் ரஞ்சித்குமார் (2), விரான் சமுதித (2), குகதாஸ் மாதுளன், அணித்தலைவர் விஹாஸ் தெவ்மிக (2), பிரவீன் மனீஷவிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 28.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களையே பெற்று 131 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக ஷாருஜன் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .