Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, வெற்றி - தோல்வியற்ற முடிவை நோக்கிப் பயணித்துக் கொண்டுள்ளது. போட்டியின் இறுதி நாளான நாளை, 98 ஓவர்கள் வீசப்பட வேண்டிய நிலையில், இரண்டு அணிகளும் தமது இரண்டாவது இனிங்ஸை இன்னமும் ஆரம்பிக்கவேயில்லை.
மெல்பேணில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 278 ஓட்டங்களுடன் நேற்றைய நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, இன்றைய நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 4565 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இது, பாகிஸ்தான் அணி பெற்ற 443 ஓட்டங்களை விடவும் 22 ஓட்டங்கள் அதிகமாகும்.
உஸ்மான் கவாஜா 95 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 10 ஓட்டங்களுடனும் நேற்றைய நாளை ஆரம்பித்தனர். ஆனால், மேலதிகமாக 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில், கவாஜா ஆட்டமிழந்தார். பின்னர், 4ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஸ்மித்தும் பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப்பும் 92 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
நேற்று , தனது 17ஆவது டெஸ்ட் சதத்தைப் பெற்ற உப தலைவர் டேவிட் வோணரின் சத எண்ணிக்கையைச் சமப்படுத்திய தலைவர் ஸ்மித், தனது 17ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர், ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களுடன் களத்தில் காணப்படுகிறார். தவிர மிற்சல் ஸ்டார்க், 7 ஓட்டங்களுடன் காணப்படுகிறார்.
ஏற்கெனவே மழையால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட இப்போட்டியில், இன்றைய தினமும் 55.5 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்டன. இன்னும் மழை பெய்யும் வாய்ப்பிருப்பால், போட்டியில் முடிவு எட்டப்படும் வாய்ப்புகள் இல்லையென்றே கருதப்படுகிறது. பந்துவீச்சில் சொஹைல் கான், யாசீர் ஷா, வஹாப் றியாஸ் மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
30 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
2 hours ago