2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஸ்டைறியன் குரான் பிறீ: வென்ற வெர்ஸ்டப்பன்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 28 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒஸ்திரியாவில் நேற்று நடைபெற்ற ஸ்டைறியன் குரான் பிறீயில், றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.

இப்பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்திருந்த நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன், ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வென்றிருந்தார்.

இந்நிலையில், பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடிஸ் அணியின் லூயிஸ் ஹமில்டன் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை ஐந்தாமிடத்திலிருந்து ஆரம்பித்த அவரின் சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ் மூன்றாமிடத்தைப் பெற்றார்.

அந்தவகையில், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 156 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் காணப்படுகின்றார். நடப்புச் சம்பியனான பிரித்தானியாவின் ஹமில்டன் 138 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 96 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் றெட் புல் அணியின் மெக்ஸிக்கோ ஓட்டுநரான சேர்ஜியோ பெரேஸும் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .