Janu / 2023 ஜூன் 06 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய குரான் பிறீயானது ஸ்பெய்னின் பார்சிலோனாவில் நேற்று முன்தினம் நடைபெற்றபோது நடப்புச் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
இந்நிலையில் பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்து இரண்டாமிடத்தை மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹமில்டன் பெற்றதோடு, 12ஆம் இடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடீஸின் மற்றைய ஓட்டுநர் ஜோர்ஜ் ரஸல் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
அந்தவகையில் இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் றெட் புல் அணியின் *வெர்ஸ்டப்பன் 170 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் காணப்படுகின்றார். றெட் புல்லின் மற்றைய ஓட்டுநரான சேர்ஜியோ பெரேஸ் 117 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றார். மூன்றாமிடத்தில் 99 புள்ளிகளுடன் அஸ்தன் மார்டினின் பெர்ணாண்டோ அலோன்ஸோ காணப்படுகின்றார்.

4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago