Shanmugan Murugavel / 2016 நவம்பர் 08 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹராரேயில் இடம்பெற்றுவரும் இரண்டாவது போட்டியில், அணித்தலைவர் ரங்கன ஹேரத்தின் சாதனையுடன் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்துகிறது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தனஞ்சய டி சில்வாவின் 127, அசேல குணரட்னவின் 116, உபுல் தரங்கவின் 79 ஓட்டங்களின் துணையோடு, சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 504 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, இன்றைய மூன்றாவது நாளின்போது, 272 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், பிரயன் சாரி 80, கிரேய்க் எர்வின் 64, ஷோன் வில்லியம்ஸ் 58 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஹேரத் ஐந்து விக்கெட்டுகளையும் டில்ருவான் பெரேரா மூன்று விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி, நறைய ஆட்ட நேர முடிவின்போது நான்கு விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்று 334 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில், திமுத் கருணாரட்ன 54, அசேல குணரட்ன ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளனர். பந்துவீச்சில், கார்ல் மும்பா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
சிம்பாப்வேயின் இனிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்குமெதிராக ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மூன்றாவது வீரராக தனது பெயரைப் பதிவு செய்து கொண்டார். டேல் ஸ்டெய்ன், முத்தையா முரளிதரன் ஆகியோரே இச்சாதனையைப் புரிந்த மற்றைய இருவர் ஆவர்.
6 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
13 Apr 2026