Editorial / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்
மறுமலர்ச்சி நகரம் எனும் தொனிப்பொருளில் கீழ் உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றன.
அந்த வகையில் ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள், ஹட்டன் டன்பார் மைதானத்தில் பல்வேறு நிகழ்வுகளுடன் இடம்பெற்றன.
அதில் பாடசாலை மட்டத்திலான போட்டிகளும் விளையாட்டு கழகங்களுகளுக்கு இடையிலான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் தலைவர் அசோக் கருணாரத்ன தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி உதைப்பந்தாட்டம். தற்பாதுகாப்பு என பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.
இந்த இறுதி நாள் நிகழ்விற்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி, பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டதோடு வெற்றி பெற்ற கழகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் வெற்றிக்கேடயங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago