Editorial / 2017 நவம்பர் 19 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, இலங்கையணியின் முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்கவை கைச்சாத்திடுவதை இலங்கை கிரிக்கெட் சபை நெருங்கியுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக, கொழும்புக்கு அடுத்த வாரம் வரவுள்ள சந்திக ஹத்துருசிங்க, தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்திய அணிக்கெதிரான தொடரின் பின்னர் அணியைப் பொறுப்பெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பொறுப்பேற்குமிடத்து, தனது முன்னைய அணியான பங்களாதேஷுக்கெதிரானதாகவே சந்திக ஹத்துருசிங்கவின் முதலாவது தொடர் அமையும்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக, இவ்வாண்டு ஒக்டோபரில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு சந்திக ஹத்துருசிங்க அறிவித்திருந்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago