Shanmugan Murugavel / 2016 மே 26 , மு.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது சக மெர்சிடிஸ் வாகன ஓட்டுநரான நிக்கோ றொஸ்பேர்க்குடன், தனக்கு முரண்பாடுகள் கிடையாது என, மூன்றுமுறை உலகச் சம்பியனாகத் தெரிவான லூயிஸ் ஹமில்டன் தெரிவித்துள்ளார்.
ஸ்பெய்னில் வைத்து அவர்களது கார்கள் மோதிக் கொண்டமையைத் தொடர்ந்து, அவர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
எனினும், இருவருக்குமிடையிலான உறவுகள், நலமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், கடந்த காலத்தில் அவ்வாறு முரண்பாடுகள் இருந்திருக்கலாம் எனத் தெரிவித்ததோடு, அங்கு வெறுமனே மரியாதையே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
முதல் 5 காரோட்டங்களில் நான்கில் வெற்றிபெற்றுள்ள றொஸ்பேர்க், சம்பியன்ஷிப்பில் 100 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள அதேவேளை, அவரை விட 43 புள்ளிகள் குறைவாக உள்ள ஹமில்டன், மூன்றாவது இடத்திலேயே காணப்படுகிறார்.
ஆறாவது போட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, மொனாக்கோவில் இடம்பெறவுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago