Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 09, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று அதிகாலை நடைபெற்ற ஐக்கிய அமெரிக்க குரான் பிறீயில், றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
பந்தயத்தை முதலிடத்திலிருந்து ஆரம்பித்த நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன், ஆரம்பத்திலேயே முதலிடத்தை மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹமில்டனிடம் பறிகொடுத்திருந்தார்.
எனினும், முதலில் டயர் மாற்றத்தை மேற்கொண்டு, பிரித்தானியாவின் ஹமில்டனை தடுத்து பின்னர் வெர்ஸ்டப்பன் வென்றிருந்தார்.
அந்தவகையில், இரண்டாமிடத்தை நடப்புச் சம்பியனான ஹமில்டனும், மூன்றாமிடத்தை வெர்ஸ்டப்பனின் சக றெட் புல் அணியின் ஓட்டுநரான மெக்ஸிக்கோவின் சேர்ஜியோ பெரேஸும் பெற்றனர்.
இந்நிலையில், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் புள்ளிகள் பட்டியலில் 287.5 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் வெர்ஸ்டப்பன் உள்ளார். இரண்டாமிடத்தில் 275.5 புள்ளிகளுடன் ஹமில்டனும், 185 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஹமில்டனின் சக மெர்சிடீஸ் அணி ஓட்டுநரான பின்லாந்தின் வல்ட்டேரி போத்தாஸும் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago