2026 மே 04, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ந.ம.இயக்கம் போட்டியிடுவது குறித்து எதிர்வரும் 20 ஆம் திகதி தீர்மானிக்கப்

Kogilavani   / 2012 மே 11 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்லில் நல்லாட்சிக்கான மக்கள் போட்டியிடுவது குறித்து எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அங்கத்தவர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று அன்றைய தினம் இது தொடர்பாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படுமென அஷ்ஷெக் பிர்தௌஸ் நழீமி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் தமிழர் அல்லது முஸ்லிம் என்பதற்கப்பால் தகுதியான முதலமைச்சர் வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகவும் உள்ளது என  அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடந்த காத்தான்குடி நகர சபை தேர்தலில் 7000 வாக்குகளை பெற்று இரண்டு நகர சபை உறுப்பினர்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .