2026 மே 04, திங்கட்கிழமை

பல்கலைக்கழகம் தெரிவான வறிய மாணவர்கள் 21 பேருக்கு நிதியுதவி

Kogilavani   / 2013 மார்ச் 13 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழம் தெரிவான மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட வறிய மாணவர்கள் 21 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்;ளது.

நிதியுதவி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ அமைப்பின் ஏற்பாட்டில் அதன் கட்டிடத் தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 10000 ரூபா வீதம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு, வை.எம்.சி.ஏ அமைப்பின் பொதுசெயலாளர் கலாநிதி டி.டி.டேவிட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகை, இவ் அமைப்பின் மூத்த உறுப்பினரான தங்கராஜா மற்றும் இதன் பிரதித் தலைவர் கிருபை ராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .