2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி செய்யும் 5 ஆண்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 13 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி செய்யும் 5ஆண்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை காலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாவட்டத் திணைக்களங்களின் தலைவர்கள், அரசசர்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு இதன்போது திட்டம் தொடர்பிலான விளக்கங்களும், நடைமுறைப்படுத்தல் தொடர்பான விபரங்களும் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தில், இடர்காலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளல், விவசாய, மீன்பிடி, கால்நடை அபிவிருத்தி,  சிறுகைத் தொழில், சுகாதாரம் போன்றவற்றுக்கான திட்ட வரைபுகளும் இன்னும் பல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலின் போது, நிறுவனப் பிரதிநிதிகளிடம் ஆலோசனைகளும் கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .