2025 மே 03, சனிக்கிழமை

உழவு இயந்திர சில்லில் நசுங்குண்டு 7 வயதுச் சிறுவன் மரணம்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 28 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கொடுவாமடுவிலில் இன்று (28) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயதுச் சிறுவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரகுகரன் விதுர்ஷன் என்ற சிறுவனே கொல்லப்பட்டவராகும்.

கொடுவாமடுக் கிராமத்தின் உள் வீதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு நின்ற போது அந்தப்பகுதியால் வேகமாக வந்த உழவு இயந்திரம், சிறுவன் மீது ஏறிச் சென்றதாக கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது செங்கலடி வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக கிராம சேவையாளர் எஸ். கோகுலராஜ் தெரிவித்தார்.

உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X