2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

மட்டக்களப்பில் மீண்டும் மழை: 31.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து மீண்டும் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளதுடன் கடந்த 21 மணித்தியால மழை வீழ்ச்சியாக 31.4 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய அதிகாரி எஸ்.சூரியகுமார் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலைக் காரணமாக வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் மழை ஓய்ந்து வெள்ளம் வடியத் துவங்கியிருந்ததால் ஏற்கெனவே தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் மழை மீண்டும் பரவலாக பெய்ய ஆரம்பித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .