2026 மே 04, திங்கட்கிழமை

மூதூர் பிரதேசத்தில் இருந்து 50 இளைஞர் யுவதிகள் வாழைச்சேனைக்கு விஜயம்

Super User   / 2012 மே 13 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


சமாதானத்திற்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவையின் ஏற்பாட்டில் இன ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் மூதூர் பிரதேசத்தில் இருந்து சுமார் 50 தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் நேற்று சனிக்கிழமை வாழைச்சேனை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.

மூதூர் பிரதேசத்தில் இருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகளை நாசிவன்தீவு பிரதேசத்தில் வரவேற்கும் நிகழ்வு சமாதானத்திற்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவையின் செயற்திட்ட இணைப்பாளர் பி.ஜெயபாரதி தலைமையில் இடம்பெற்றது.

இக்குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தளை பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் சந்தித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .