2026 மே 04, திங்கட்கிழமை

இந்திய வீட்டுத் திட்டத்தில் 75 வீதமானவற்றை படுவாங்கரைக்கு வழங்க தீர்மானம்: வி.முரளிதரன்

Menaka Mookandi   / 2013 மார்ச் 16 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.வதனகுமார்


இந்திய வீட்டுத் திட்டத்தினுடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கின்ற 2000 வீடுகளில் 75 வீதமான வீடுகளை போரினால் பாதிக்கப்பட்ட படுவாங்கரை பகுதி மக்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

இந்திய வீட்டுத்திட்டத்தினுடாக முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 300 வீடுகளில் 100 வீடுகளை வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் நிர்மானிப்பது தொடர்பாக ஆராயும் விசேட அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று மாலை வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வெ.தவராசாவின் ஏற்பாட்டில் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற போது கருத்துத் தெரிவிக்கையிலே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கடந்த மூன்ற ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசுடன் ஜனாதிபதி செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அமைய 10 இலட்சம் ரூபா பெறுமதியான 50 ஆயிரம் வீடுகளை இந்தி அரசாங்கம் வழங்கியுள்ளது. இதில் 40 ஆயிரம் வீடுகள் வடமாகாணத்திற்கும் நான்காயிரம் வீடுகள் கிழக்கு மாகாணத்திற்கும் ஏனைய ஆறாயிரம் வீடுகள் மலையகத்திற்கும் ஏனைய பகுதிகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு வழங்கிய 4000 வீடுகளில் 2000வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இவற்றில் 75 வீதமான வீடுகளை போரினால் பாதிக்கப்பட்ட படுவாங்கரைப் பகுதியில் உள்ள வீடு அற்ற மக்களுக்கும் வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்ததுடன் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ள 300 வீடுகளை பட்டிருப்புத் தொகுதியில் வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு 100 வீடுகளும் மட்டக்களப்புத் தொகுதியில் வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு 100 வீடுகளும் கல்குடாத் தொகுதியில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு 100 வீடுகளும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .