2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டு. மாவட்டத்தில் 1ஆம் திகதி 40 மணித்தியால மின்வெட்டு

Super User   / 2012 நவம்பர் 26 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டு. மாவட்டத்தின் 36 இடங்களில் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி சனிக்கிழமை 40 மணித்தியால மின்வெட்டு இடம்பெறும்  என இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக டிசம்பர் 1ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மண்டூர், வெல்லாவெளி, கோயில்போரதீவு, பொறுகாமம், பழுகாமம், முனைக்காடு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, திக்கோடை, அரசடித்தீவு, தும்பங்கேணி, தாந்தாமலை, அம்பிளாந்துறை, எருவில், குறுமண்வெளி, பெரியகல்லாறு, கோட்டைக்கல்லூறு, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், மாங்காடு, குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா, மண்முனை, ஆரையம்பதி, காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய், நாவற்குடா, நொச்சிமுனை, கல்லடி, திருச்செந்தூர், புதுமுகத்துவாரம் மற்றும் நாவலடி ஆகிய பிரதேசங்களில் இந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .