2026 மே 04, திங்கட்கிழமை

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 178வது ஜெயந்தி தின விழா

Kogilavani   / 2013 மார்ச் 13 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 178வது ஜெயந்தி தின விழா மட்டக்களப்பு கல்லடி இராமகிருஸ்ணமிஷனில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு- கல்லடி இராமகிருஸ்ணமிஷன் தலைவர் சுவாமி கபாலிசானந்தாஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய அவர்,

மானிடப்பிறவியைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். நாம் இறை சிந்தனையோடு வாழப்பழக வேண்டும். இறை சிந்தனையோடு கூடிய கல்வியே எம்மைப் முழுமையான மனிதனாக மாற்றும். இவ்வாறே பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் வாழ்ந்து மறைந்தார். இதனாலேயே நாம் இன்று அவரை நினைவு கொள்கின்றோம்.

எண்ணெய் இல்லாமல் விளக்கு எரியாது. அதேபோல் இறைவன் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது, அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும், முக்தியும் கைகூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவன் உள்ளத்தில் நுழையக் கூடாது' என கூறினார்.

இந்நிகழ்வில், ஊர்வலம், பக்திப் பாடல்கள், கொடியேற்றம், சிறப்புப் பூஜை, வாசிப்பு, ஹோமம், ஆரத்தி  என்பன இடம்பெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .