2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மைலம்பாவெளி 100 வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு உறுதிப்பத்திரம் கையளிப்பு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு மைலம்பாவெளியில் யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 நிரந்தர வீடுகளுக்கான உறுதிப் பத்திரங்கள் திங்கட்கிழமை (24) கையளிக்கப்பட்டன. 

இந்நிகழ்வு கரித்தாஸ் எகெட் சனசமூக மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கரித்தாஸ் எகெட் நிறுவக இயக்குனர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் கலந்துகொண்டார்.

அத்துடன், கிராம சேவை உத்தியோகஸ்தர் ஜெயகோசலன், நிறுவக ஆளணி நிர்வாக முகாமையாளர் கிங்ஸ்லி பாத்லட், நிகழ்ச்சித்திட்ட பொறுப்பாளர் எஸ்.பத்மநாதன், பொறுப்புக்கூறல் அதிகாரி இ.கிறிஸ்ரி, ஆயர் இல்ல ஊடகப்பிரிவு பொறுப்பாளர் எஸ்.மைக்கல் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது, மேற்படி வீட்டுத் திட்டத்துக்கு முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 29 பயனாளிகளுக்கான வீட்டு உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. ஏனைய பயனாளிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று கரித்தாஸ் எகெட் நிறுவனம் தெரிவித்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X