2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 12 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 13 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான  விற்பனையில் ஈடுபட்டுவந்ததாகத் தெரிவிக்கப்படும்  12 பேர் கடந்த சில தினங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி என்.ரஞ்சன் நேற்று தெரிவித்தார்.

நாவலடி, திராய்மடு, கொக்குவில், இலுப்பட்டிச்சேனை உட்பட பல பகுதிகளில் மாவட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் இதன்போது அனுமதிப்பத்திரமின்றி
சாராயம், கள்ளு போன்ற சட்டவிரோத மதுபான வகைகளை விற்பனை செய்தவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். 

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .