2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை தமிழரசு கட்சியின் 14 ஆவது தேசிய மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Kogilavani   / 2012 மே 24 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
இலங்கை தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய மாநட்டுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாநட்டு ஏற்பாட்டுக்குழு தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றக்கிழமை காலை நடைபெறவுள்ளது.

இம் மாநாட்டை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய தினங்களில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பழைய செயற்குழு கூட்டம், புதிய செயற்குழு கூட்டம், புதிய செயற்குழு தெரிவுக் கூட்டங்கள் என்பன மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளன.

இந்த மாநாடு இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக செயற்குழுவில் தெரிவு செய்யப்படும் தலைவரின் தலைமையிலேயே நடைபெறவுள்ளது.

தேசிய மாநாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவருமான இரா.சம்பந்தன் பேருரையை நிகழ்த்தவுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாடு ஏற்கனவே மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .