2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 14 பேர் ஏறாவூர் பொலிஸாரால் கைது

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன், லோஹித்)

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  சிலாபத்தைச் சேர்ந்த 14 பேர்  நேற்று வியாழக்கிழமை மாலை ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு  கைது செய்யப்பட்டவர்களில் 5 பெண்கள், 6 சிறுவர்கள், மற்றும் 3 ஆண்கள் உள்ளடங்குவதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் இன்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலியா செல்வதற்கான ஏற்பாடுகளுடன் இவர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து  ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .