2025 மே 03, சனிக்கிழமை

மட்டு. அபிவிருத்திக்கு ரூ. 1,887 மில்லியன் உதவி

Menaka Mookandi   / 2014 மார்ச் 05 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,887 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் 1,700 மில்லியன் ரூபா மாவட்ட அபிவிருத்திக்காகவும் 187 மில்லியன் ரூபா சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் 1,700 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் இந்த அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று செவ்வாய்க்கிழமை (04)  பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ஸ், ஐரோப்பிய ஒன்றிய யுனொப்ஸ் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் சீலியா மார்க்குஸ் உட்பட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் திணைக்கள தலைவர்கள், உள்ளுராட்சிமன்றங்களின் அதிகாரிகளும் பங்குகொண்டனர்.

இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாநகரசபை, காத்தான்குடி நகரசபைகள் மற்றும் மாவட்டத்துக்குட்பட்ட பிரதேச சபைகளிலும் கழிவகற்றல் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் சர்வதேச நிதி நிறுவனத்தினால் 187 மில்லியன் ரூபாய் செலவில் சுற்றுலாத்துறை அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பாசிக்குடாஇ காத்தான்குடி கடற்ரைஇ கல்லடி கடற்கரைஇ உட்பட சுற்றுலாத்துறையாக கருதப்படும் அனைத்து இடங்களும் இத்திட்டத்தின்கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன என்று மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இம்மாதம் 15ஆம் திகதி இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் சர்வதேச நிதி நிறுவனம் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X