2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஸக்காத் 2ஆம் கட்ட வீடுகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 22 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸக்காத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஸக்காத் 2ஆம் கட்ட வீடுகள் இன்று (22) பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

இந்த வைபவம் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும் ஆபள்ளிவாயலில் ஜும் ஆத் தொழுகையின் பின்னர் நடைபெற்றது. இதன்போது 8 வீடுகளின் திறப்புகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரி.ஹாலித் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதி தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.ஏ.ஜவாத், காத்தான்குடி காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார், சம்மேளன செயலாளர் மௌலவி எஸ்.எச்.றமீஸ் ஜமாலி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸக்காத் திட்ட சூறா சபை செயலாளர் ஏ.எம்.சாதிகீன் சம்மேளன முக்கியஸ்த்தர்கள் உட்பட முக்கியஸ்த்தர்கள் உலமாக்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .