2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 2ஆம் இலக்க சுயேட்சைக்குழு ஸ்ரீ.ல.சு.கட்சியுடன் இணைவு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஒட்டகம் சின்னத்தில் போட்டியிடும் நவரட்ணம் காண்டீபன் தலைமையிலான 2ஆம் இலக்க சுயேட்சைக்குழு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ளது.

நொச்சிமுனையிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை  தலைமை வேட்பாளரும் சுயேட்சைக்குழு தலைவருமான நவரட்ணம் காண்டீபன் உட்பட 6 வேட்பாளர்களும் அவரது ஆதரவாளர்களும் மட்டக்களப்பு மாவட்ட  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் இராஜன் மயில்வாகனத்திடமிருந்து கட்சி அங்கத்துவ அட்டைகளைப் பெற்றுக்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய அபிவிருத்திப்பணிகளே எம்மை அவரது கட்சியில் இணையவைத்தது  என நவரட்ணம் காண்டீபன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .