2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சிறுவனின் சிகிச்சைக்கு 20 இலட்சம் ரூபாய் அன்பளிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
, இக்பால் அலி

'நத்தைச் சுருள்' எனும் வலது குறைப்பாட்டு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயதுச் சிறுவனது சிகிச்சைக்காக 20 இலட்சம் ரூபாய் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி சிறுவன் செவிப்புலன் இன்றியும் வாய் பேசமுடியாமலும் வலது குறைவுக்குள்ளான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த இச் சிறுவன் பிறப்பிலிருந்து 'நத்தைச் சுருள்' எனும் நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

இந்தச் சிறுவனைக் குணப்படுத்த ரூபாய் 30 இலட்சம் தேவைப்படும் என்று வைத்தியர்கள் கூறியுள்ள நிலையில் குவைத் நாட்டு ஸக்காத் நிதியத்திலிருந்து 20 இலட்ச ரூபாய் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

நேற்று வியாழனன்று ஏறாவூர் தௌஹீத் ஜமா அத் பள்ளிவாசலில் இடம்பெற்ற உதவி வழங்கும் நிகழ்வில் பறகஹதெனியவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள ஜமா அத் அன்ஸாரிஸ் சுன்னத்துல் முஹம்மதியாவின் அமீர் என்.பி.எம். அபூபக்கர் சித்தீக் இந்தக் காசோலையைச் சிறுவனிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில்  ஏறாவூர் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் தலைவரும் பிரதேச மரண விசாரணை அதிகாரியுமான அல் ஹாஜ். எம்.எஸ்.எம். நஸீர் உட்பட தௌஹீத் ஜமாஅத்தினரும் உடனிருந்தனர்.     

 'நத்தைச் சுருள்' வலது குறைவைக் குணப்படுத்த பரோபகாரிகளிடமிருந்து நிதிதிரட்டுவதற்காக ஏறாவூர் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் தலைவரும் பிரதேச மரண விசாரணை அதிகாரியுமான அல் ஹாஜ். எம்.எஸ்.எம். நஸீர் முயற்சி மேற்கொண்டிருந்தார்.

அதனடிப்படையில் பலர் நன்கொடைகளை ஏற்கனவே வழங்கியிருந்தார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X