2025 மே 03, சனிக்கிழமை

கடந்த 24 மணித்தியாலங்களில் 60 வீத மழைவீழ்ச்சி

Kogilavani   / 2014 பெப்ரவரி 27 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஜவபர்கான், தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியால கால இடைவெளியில் மட்டக்களப்பில் 60 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

கிழக்கில் தொடர்ந்தும் மழை வீழச்சியை எதிர்பார்;ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை மழைப் பருவ காலம் பொய்த்துப் போன நிலையில் தற்போது பெய்து வரும் அடைமழையினால் அறுவடைக்குத் தயாராக இருந்த பல நூற்றுக் கணக்கான ஏக்கர் நெல்வயல்கள் பாதிக்கப்பட்டு நீரில் மூழ்கியுள்ளன.

இம்முறை பெரும்போகச் செய்கையின்போது செய்கை பண்ணப்பட்ட 61 ஆயிரம் ஹெக்டெயர் நெற் செய்கையில் பெரிய நீர்ப்பாசனம், சிறிய நீர்ப்பாசனம் தவிர்ந்த சுமார் 50 வீதமான மானாவாரி (வான்மழையை எதிர்பார்த்த) நெற்செய்கை கடும் வரட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுவிட்டது. 

மீதமானவற்றில் ஏற்கெனவே 90 வீதமான நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில் தற்போது பெய்து வரும் அடை மழையினால் மீதமுள்ள 10 வீதமான நெல் அறுவடை பாதிக்கப்பட்டிருப்பதாக  மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பி.உகநாதன் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X