2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கொடுவாமடுக் கிராமத்தில் 26 வீடுகளின் நிர்மாண வேலைகளும் பூர்த்தி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொடுவாமடுக் கிராமத்தில்  26 வீடுகளுக்கான நிர்மாண வேலைகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.

மேற்படி 26 வீடுகளும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சின் விருகம்பான திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளில் ஒவ்வொரு வீட்டுக்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 2 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு பயனாளிகளின் ஒத்துழைப்புடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினர்.

இந்த வீடுகளின் நிர்மாணப் பணிகளுக்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மொத்தமாக 52 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X