2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வாகரையில் 265 பேர் காணாமல் போயுள்ளனர்

Kogilavani   / 2014 மார்ச் 02 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில், 1990 ஆண்டு முதல  2009 ஆம் ஆண்டு வரையான காலபகுதியில் அசாதாரண சூழ்நிலைக்காரணமாக இதுவரை 265 பேர் காணாமல் போனது பற்றிய பதிவுகள் பிரதேச செயலகத்துக்கு கிடைத்திருப்பதாக பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

ஏற்கெனவே தாம் தமது பிரதேச செயலகப் பிரிவில் வாழும் குடியிருப்பாளர்களின் குடும்ப விவரங்களைத் திரட்டும் நடவடிக்கையைத் ஆரம்பித்து இருப்பதாகவும் அதன்போதே காணாமல் போனோர் பற்றிய விவரங்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றதாகவும் அவர் மேலும் கூறினார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளின் கிழக்கு மாகாணத்திற்கான முதலாம் அமர்வு இம்மாதம் 20 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அந்த விசாரணைகளின் ஒரு அமர்வு மட்டக்களப்பு வாகரையிலும் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினர் மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம்; திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, செங்கலடி, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் பொதுமக்களுடன் நேரடியாக உரையாடி முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X