2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவு 27இல்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 21 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவு எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. வீதியிலுள்ள இணையத்தின் அலுவலகத்தில் அண்மையில்  நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்ட0து.

இணையத்தின் புதிய நிர்வாகத்திற்கான தெரிவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் அங்கத்துவம் பெற விரும்பும் அரசசார்பற்ற நிறுவனங்கள்  விண்ணப்பித்து பதிவுகளை மேற்கொள்ள முடியும் என  அதன் உபதலைவர் வி.கமலதாஜஸ் தெரிவித்தார்.

புதிய நிர்வாக சபைத் தெரிவின்போது, இந்த வருடத்துக்கான சந்தாப்பணம் செலுத்திய அரசசார்பற்ற நிறுவனங்களே கலந்துகொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .