2025 மே 05, திங்கட்கிழமை

குசலானமலை கிராமத்தில் 28 நிரந்தர வீடுகள் நிர்மாணம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள் குடியேற்ற கிராமமான குசலானமலை (கரடியன்குளம்) கிராமத்தில் 28 நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக சுவீடிஸ் கூட்டுறவு சங்கத்தின் இணைப்பாளர் டி.மயூரன் தெரிவித்தார்.

இந்த வீடுகள் சுவீடிஸ் கூட்டுறவு சங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வீடுகளுடன் இந்த கிராமத்தில் 5 பொதுக்கிணறுகளும், ஒரு பொதுக் கட்டிடமும், பாலர் பாடசாலை கட்டிடமொன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கிராமத்தில் நிர்மானிக்கப்படுகின்ற ஒவ்வொரு வீடும் தலா ஆறுஇலட்சத்து முப்பதாயிரம் பெறுமதியானதாகும்.

இதன் நிர்மான வேலைகள் துரிதமாக இடம் பெற்றுவருவதாகவும் விரைவில் இது பயனாளிகளுக்கு கையளிக்கப்படுமெனவும்  சுவீடிஸ் கூட்டுறவு சங்கத்தின் இணைப்பாளர் டி.மயூரன் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X