2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

நிவாரணம் வழங்க முதற்கட்டமாக 3 மில்லியன் ரூபா வழங்க அமைச்சர் உறுதி: செல்வராசா எம்.பி தகவல்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் மூன்று மில்லியன் ரூபாவை முதல் கட்டமாக வழங்குவதாக அவர் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைச்சென்று பார்வையிட்டதன் பின்னர் அங்கிருந்து  அனர்த்த முகாமைத்துவ அமைச்சரை தொடர்புகொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடியதாகவும் இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு சுமார் 10 மில்லியன் தேவையாகவுள்ளதாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.

முதல் கட்டமாக மூன்று மில்லியன் ரூபாவை வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். அத்துடன் மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மகிழூர், கண்ணகிபுரம், குருமண்வெளி, ஓந்தாச்சிமடம் ஆகிய பகுதிகளின் நிலைமைகள் தொடர்பில்   அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தேன். அவர்களுக்கு உதவுவதற்காக மாவட்ட செயலகத்துக்கு உடனடியாக ஒரு மில்லியன் ரூபாவை அனுப்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்  நிவாரண வழங்குவது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினேன்

அத்துடன் மினி சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டது தொடர்பில் மட்டக்களப்பு பிராந்திய மின் அத்தியசகரின் கவனத்துக்கு கொண்டுவந்தேன்.

அவரது துரித நடவடிக்கைகள் காரணமாக  மின்விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பில் மின்சாரசபைக்கு தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .