2025 மே 01, வியாழக்கிழமை

தாண்டவன்வெளியிலுள்ள 3 கடைகளில் கொள்ளை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, தாண்டவன்வெளி பகுதியில் உள்ள 03 வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலயத்துக்கு அருகில் உள்ள 3 வர்த்தக நிலையங்களிலேயே நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆடை விற்பனை நிலையம்,  இலத்திரனியல் விற்பனை நிலையம், அச்சகம் ஆகியவற்றிலேயே கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கொள்ளைச் சம்பவங்கள்;  தொடர்பில் விரிவான  விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .