2026 மே 04, திங்கட்கிழமை

வெருகல் பிரதேசத்தில் விஷக்கடிக்கு 38 பேர் சிகிச்சை

Suganthini Ratnam   / 2013 மார்ச் 06 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு, வெருகல் பிரதேசத்தில் விஷப் பாம்புகளால் தீண்டப்படுவோரின் எண்ணிக்கை  வாரத்தில் இருவர் என்ற அடிப்படையில் காணப்படுவதாக வெருகல் பிரதேச வைத்தியசாலையின் கடமை வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி தெரிவித்தார்.

கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் விஷக்கடிகள் காரணமாக சிகிச்சை பெற்றுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 38 ஆகும்.

இவர்களில் 18 பேர் அதிக விஷமுடைய புடையன், விரிபுடையன், நாகம், வளலை, கருவளலை ஆகிய பாம்புகளால் தீண்டப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஏனைய 20 பேரும் தாம் என்ன வகையான பாம்பினால் தீண்டப்பட்டோம் என்கின்ற விவரம் தெரியாத நிலையில் விஷக்கடிக்குச் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாம்புக்கடிக்கு உள்ளானவர்கள் உடனடியாக சிகிச்சை பெற்றதால் உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .