2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரம் தாக்கி 4 யானைகள் பலி

Kogilavani   / 2012 நவம்பர் 30 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, வாகனேரி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் இறந்துள்ளன. 119- 120 ஆவது மைல் கல்லுக்கு இடைப்பட்ட பகுதியில்,  நேற்று வியாழக்கிழமை இரவு  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 33ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கியதிலேயே இந்த யானைகள் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மின்சாரக் கம்பமொன்று உடைந்திருந்த பகுதியொன்றிலுள்ள மலையொன்றைக் கடந்து தொப்பிகல பிரதேசத்துக்கு செல்ல முற்பட்ட போதே மேற்படி யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .