2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

போரில் பாதிக்கப்பட்ட ஆயித்தியமலை மக்களுக்கான கரிட்டாஸ் நிறுவனத்தின் 45 வீடுகளும் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 மே 28 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறியுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் எஹெட் கரிட்டாஸ் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 45 வீடுகள் திறந்து வைக்கப்பட்டு பயணாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

எஹெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு, கல்முனை பிராந்திய இயக்குனர் அருட் தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அராசங்க அதிபர் கே.விமலநாதன், கரிட்டாஸ் நிறுவனத்தின் தேசிய இயக்கனர் வணபிதா ஜோர்ஜ் சிகாமணி, இங்கிலாந்து கப்போட் நிறுவன இயக்குனர் திருமதி விக்டோரியா ஜோன், வவுணதீவு பிரதேச செயலாளர் கே.தவராஜா உள்ளிட்ட அதிதிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

இரண்டு கோடியே 25 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று இக்குடும்பங்களுக்கு ஏற்கனவே வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக எஹெட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக இணைப்பாளர் எம்.மைக்கல் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .