2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டு. மாவட்டத்தில் 5000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்,ஸரீபா, லோஹித்)
மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு 5000 ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 1000 இடை நிலைப் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டமானது இன்று நாடுமுழுதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்  மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் இம்மாவட்டத்தில் 73 ஆரம்ப பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இவ் வைபவத்தில், பிரதி அமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா, மாவட்ட திட்டப்பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன், வலய கல்விப் பணிப்பாளர் திருமதி பவளகாந்தன், பிரதிக்கல்லிப் பணிப்பாளர் சத்தியநாதன் உள்ளிட்ட பலரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் வலய கல்வி பணிப்பாளர்கள் கல்வி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கல்குடா வலயக் கல்வி அலுவலகப் பிரிவிற்கான நிகழ்வு  பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் அப்பாடசாலையின் அதிபர் கே.கதிர்காமநாதன் தலைமையில் இடம்பெற்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .