2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாம்பு தீண்டியதில் 6 வயதுக் குழந்தை மரணம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 14 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஆறு வயதுக் குழந்தையொன்று பாம்பு தீண்டியதால் மரணமடைந்துள்ளது.

மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலையில் இந்தச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த தர்மரெட்ணம் நிசாந்தனி என்ற குழந்தையே இவ்வாறு மரணித்துள்ளது.

இந்தக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது காலை 11.30 மணியளவில் பாம்பு தீண்டியுள்ளது.

குழந்தை உடனடியாக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் மேலதிக அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும், பாம்பின் விஷம் ஏற்கெனவே ஏறிவிட்டிருந்ததால் இன்று மாலை 3 மணியளவில் குழந்தை சிகிச்சை பயனின்றி இறந்து விட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.



  Comments - 0

  • ibnuaboo Saturday, 14 September 2013 06:00 PM

    மிகவும் கவலையான செய்தி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X