2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புதைக்கப்பட்ட சடலம் 6 வருடங்களின் பின் தோண்டப்பட்டது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


2007 ஆம் ஆண்டு புதைக்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் மட்டக்களப்பு பொலிஸாரால் நேற்று தோண்டப்பட்டது.

வவுணதீவப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனை கிராம சேவகர் பிரிவின் நெச்சண்டகல் இத்தியடிச்சேனை புதைக்குழியில் புதைக்கப்பட்ட சடலமே இவ்வாறு தோண்டப்பட்டது.

நெச்சண்டகல் இத்தியடிச்சேனையை சேர்ந்த பொக்கணியன் இராமக்குட்டி என்பவர் 2007.01.27 தனது மூத்த மகளின் மகனான சீனித்தம்பி கிருஸ்ணேஸ்வரன் என்பவரால் குத்திக் கொலைசெய்யப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ் வழக்கை விசாரித்த நீதிபதி புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி பிரேதப் பரிசோதனை செய்யுமாறு மட்டக்களப்பு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இவ் உத்தரவிற்கமைய மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப்புலன் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரி.ஏ.என்.டீ.திம்பட்டு முணுவ தலைமையில் நீதிபதி முன்னிலையில் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லறை உடைக்கப்பட்டு தோண்டப்பட்ட எச்சங்கள் எடுக்கப்பட்டு பொலிஸாரால் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .