2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் 600 ஏக்கரில் பாரம்பரிய நெற்செய்கை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 24 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக பாரம்பரிய நெல்லினம் இம்முறை பெரும்போகத்தின் போது பயிரிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக விவசாய திணைக்கள பணிப்பாளர் கே.உகநாதன் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் இத்தகைய பாரம்பரிய நெல்லினம் 600 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மடத்தவாலு, பச்சப்பெருமாள், புருளுத்தொட, கருப்புச்சீமெட்டி போன்ற பாரம்பரிய நெல்லினங்களே இவ்வாறு பயிரிடப்பட்டுள்ளன. வாகரை, செங்கலடி, வவுணதீவு, ஆரையம்பதி, வெல்லாவெளி, கிரான், களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களில் இவை பயிரிடப்பட்டுள்ளன.

குறைந்த நிலங்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள இந்நெல்லினங்களின் அறுவடையை மூன்றறை மாதங்களில் செய்யமுடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் பெரும் போக செய்கைக்கென 17,000 கிலோ பாரம்பரிய விதை நெல்லினங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .