2026 மே 04, திங்கட்கிழமை

செங்கலடி இரட்டை கொலை; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Super User   / 2013 ஏப்ரல் 24 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


செங்கலடி இரட்டை படுகொலை சந்தேக நபர்களான நான்கு மாணவர்களையும் மேலும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு  ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல வர்த்தகரான சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி விப்ரா  ரகு ஆகியோர் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி  வீட்டில் சடலமாக மீட்கப்படடனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது மகளின் காதல் விவகாரமே இதற்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் மகள் மற்றும் அவளின் காதலன் உட்பட நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்கள் இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் ரீ.கருணாகரன் முன்னிலையில் மீண்டும் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை எதிர்வரும் மே 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் 15-16 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரட்டைப் படுகொலை விசாரணைகளை அவதானிப்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .