2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. மகாஜன கல்லூரி மண்டபத்தில் 8ஆம் திகதி இரத்ததான நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மே 02 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி மாபெரும் இரத்ததான நிகழ்வை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தெரிவித்துள்ளது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின்; மட்டக்களப்பு கிளையும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவும் இணைந்து இந்த இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் மாதாந்தத் தேவை 600 அலகுகள் ஆகும்.  மாதாந்த நன்கொடையாக 200 அலகுகள் கிடைக்கின்றன.  400 அலகுகள் இரத்தம் தேவையாகவுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு இப்பாரிய மனிதாபிமானப் பணியினை முன்னெடுப்பதாகவும் இரத்ததானம்  செய்ய விரும்பும்  நன்கொடையாளர்கள் இதில் கலந்துகொள்ளுமாறும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .