2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வறிய 823 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 மார்ச் 01 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட  வறிய குடும்பங்களை சேர்ந்த 823 மாணவர்களுக்கு தலா 280 ரூபா பெறுமதியான அ;பியாசக் கொப்பிகள் வெள்ளிக்கிழமை(28) வழக்கப்பட்டன.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வாழ்வதார அபிவிருத்தி மையம் எனப்படும் பட்ச் நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்த அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.

மேற்படி மாணவர்கள் அனைவரும் நான்கு பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள வவுணதீவு குறுஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மட்டக்களப்பு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், பேராசிரியர் எஸ்.ராஜேந்திரம், அருட்தந்தை எஸ்.சுவாமிநாதன் உட்பட மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் முக்கியஸ்த்தர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், அதிகாரிகள் முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X