2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு காய்ச்சலினால் 9 மாத குழந்தை பலி

Kogilavani   / 2013 பெப்ரவரி 07 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

காத்தான்குடியில் டெங்கு காய்ச்சலினால் 9 மாத குழந்தையொன்று நேற்று புதன்கிழமை  உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி சுகதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி சுஹதா வீதியிலுள்ள றிம்சாத் எனும் குழந்தையே டெங்கினால் உயிரிழந்துள்ளது.

காத்தான்குடி பிரதேசத்தில் இதுவரைக்கும் 8 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்த இந்த குழந்தையின் வீடு மற்றும் சுற்றப்புறச்சூழல் என்பன சுகாதார அதிகாரிகளினால் பரிசோதணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடி முதலாம் குறிச்சியிலுள்ள சுஹதா வீதி மற்றும் ஸாவிய்யா விதி, ஊர்வீதி பகுதிகளில் டெங்கு நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளதால் இங்கு டெங்கு நுளம்பை அழிக்கும் புகை விசிறப்பட்டு வருவதுடன் விசேட சிகிச்சை முகாம்களும்  நடத்தப்பட்டு வருகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .