Thipaan / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அரச பதவியுயர்வுகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள், இடமாற்றங்களில் சமத்துவம் பேணப்பட வேண்டும் என, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், இன்று (02) தெரிவித்தார்.
தொழிற்சங்கத் தலைவர் ஆ.ஜோர்ச் பிள்ளையின் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் 29.01.2017 அன்று நடைபெற்ற தொழிற்சங்க மாதாந்த ஒன்றுகூடலிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர், இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பதவியுயர்வுகள் இடமாற்றங்கள், மற்றும் வேலைவாய்ப்புக்களில் சரியான முறையில் இனவிகிதாசார பங்களிப்புக்களில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் வழங்கப்படுகின்ற வேலைவாய்ப்புக்களில் மிக மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
பிரதேச சபைகளுக்கான ஊழியர்கள் நியமனம் மற்றும் மாகாண இறைவரி உத்தியோகஸ்தர்களுக்கான போட்டிப் பரீட்சைக்கான தெரிவின் மூலமான அதிகாரிகள் நியமனம் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நேரக்காப்பாளர்களுக்காக வழங்கப்பட்ட நியமனங்கள் என, பல நியமனங்களில் இன விகிதாசாரம் முற்றுமுழுதாக மீறப்பட்டுள்ளது.
அதேபோன்று, நிதிப்பங்கீடுகளிலும் கிழக்கு மாகாணத்pதன் இன விகிதாசாரம் மற்றும் பிரதேச ரீதியான தெரிவுகள் தீர்மானிக்கப்படாமல் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கே அதிகளவான நிதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றது.
பட்டிருப்புப் பிரதேசத்தில், அடுத்த ஆண்டு ஓர் ஆடைத்தொழிற்சாலை மாகாணசபையின் பங்கீட்டுடன் ஏற்படுத்தி கொடுக்கப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது மற்றும் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை அதற்கான வேலைத்திட்டங்கள் முடிக்கப்படவில்லை எனவும், இதனை மிக விரைவாக முடித்து இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது” எனவும் அவர் தெரிவித்தார்.
3 minute ago
10 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
4 hours ago
4 hours ago