Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 03 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நாட்டில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதுடன், பகிரப்படும் ஆட்சி அதிகாரங்கள் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிக்கின்றவையாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியான கடப்பாடு இருக்க வேண்டும் என கிழக்கு மாகாணச விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
ஏறாவூரில் அமைக்கப்பட்ட வாவிக்கரைப் பூங்கா திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இந்த நாட்டினுடைய மிகப்பெரிய கட்சிகள் இரண்டும் ஒன்றாகச் சேர வேண்டும். சர்வதேசத்தினுடைய பார்வை எங்கள் மீது விழ வேண்டும். நாங்கள் தமிழர்கள் எல்லாம் ஒன்றுபட்டு இருந்திட வேண்டும் என்கின்ற இந்த மூன்று விடயங்களை எமது தலைவர்கள் தொடர்ச்சியாகச் சொல்லி வந்தார்கள். இதில் இரண்டு விடயங்கள் நடைபெற்று விட்டன.
நாட்டில் ஆட்சி அதிகாரம் பகிரப்படும போது நாட்டில் சகல பிராந்தியங்களும் முன்னேற்றமடையும். அதனுடாக நாட்டில் வாழும் சகல சமூகங்களும் தங்களுடைய மொழி, கலை, கலாசாரத்தைப் பேணும் அதேசமயம் அவர்களுடைய பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அது மக்களின் தீர்ப்புக்காக விடப்பட்டு மக்களின் ஆதரவுடன் புதிய அரசியலமைப்புச் சட்டமாக்கும் செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதனை சரியாக நிறைவேற்றுவதரில் ஜானாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவரும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வiயில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் அமைகின்றன. அவருடைய இலட்சியத்துடன் நாமும் ஒன்றிணைந்து ஆதரவினை முழுமையாக வழங்கி சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உழைக்க வேண்டும்'; என்றார்.
'மேலும் தமிழ்த் தலைவர்கள் கூறிய மூன்று ஆரூடங்களில் இரண்டு பலித்து விட்டன. இந்த இனப் பிரச்சினை தீர்வதாக இருந்தால் மூன்று முக்கிய நிகழ்வுகள் இடம்பெற வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கட்டியம் கூறினார்கள்.
அவை மாறி மாறி ஆண்டு வருகின்ற பெரிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இனப்பிரச்சனை தொடர்பான விடயங்கள் சரவ்தேச சமூகத்தினால் உற்று நோக்கப்படுகின்ற ஒரு நிலைமை உருவாக வேண்டும். சிறுபான்மை மக்கள் ஒன்றிணைய வேண்டும்; இந்த ஆரூடங்களிலே இரண்டு இப்பொழுது பலித்திருக்கின்றன.
இரண்டு பெரிய கட்சிகள் இணைந்திருக்கின்றன, சர்வதேச சமூகம் நமது பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகளை உற்றுநோக்குகின்றது. இவை இப்பொழுது பலித்திருக்கின்றன.
பன்மைத்துவமாக இந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய மொழி கலை கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றின் சிறப்புத் தன்மையோடு தங்களை வளர்த்துக் கொள்ளலாம் என்கின்ற அடிப்படையிலேயே தற்போது அரசியல் சீர் திருத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு வந்து அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி மக்கள் தீர்ப்புக்காக விடும் பிரதயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அது மக்களுடைய ஏகோபித்த ஆதரவுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இந்த நாட்டின் எல்லா மக்களும் அரசியல் சீர்திருத்த அதிகாரங்களோடு சமத்துவமாக வாழ வழிவகுக்கும்' என்றார்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago