2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இலவச சிகிச்சை முகாம்

Niroshini   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கொழும்பு பட்டக்கண்ணு பவுன்டேசனின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண விஸ்வகர்மா பொற்றொழிலாளர் சம்மேளனம் நடாத்திய இலவச சிகிச்சை முகாம், மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

இதன்போது, முள்ளந்தண்டு உபாதைக்கு உள்ளானவர்களுக்கு விசேட சிகிச்ச,  கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண விஸ்வகர்மா பொற்றொழிலாளர் சம்மேளன தலைவரும் ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதமஅதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கொழும்பு பட்டக்கண்ணு பவுன்டேசனின் முகாமைத்து பணிப்பாளர் ஏ.தியாகராஜா, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜயக்கொட ஆராய்ச்சி, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சுமார் 250பேருக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன், சுமார் 70க்கும் மேற்பட்டவர்களுக்கு முள்ளந்தண்டு உபாதை சிகிச்சைகள் வழங்கப்பட்டது.

மேலும், மேலதிக சிகிச்சை தேவைப்படுபவர்களை கொழும்புக்கு வருமாறும் கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X