Niroshini / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊடகவியலாளாகள் சமூகத்தில் மதிக்கப்படுகின்றவர்கள். அவர்களின் பாதுகாப்பு விடயமென்பது முக்கியமானதாகுமென யாழ். பத்திரிகை கழகத்தின் ஏற்பாட்டாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஆர்.தயாபரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான முதலுதவி மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற மூன்று பயிற்சி செயலமர்வின் இறுதி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(10) மாலை நடைபெற்றது.இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஊடகவியலாளர்கள் தமது பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். அதே போன்று ஊடகவியலாளர்கள் முதலுதவி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஊடகவியலாளரும் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு ஊடக சேவையை செய்ய வேண்டும். ஊடகவியலாளர்கள் சமூகத்தில் மதிக்கப்படுகின்றவர்கள் அவர்களின் குரல் ஒலிக்க வேண்டும்.
ஊடகவியலளார்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அசட்டையாக இருக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago